என்னை போலவே என் தம்பிக்கும் ஆதரவு கொடுங்கள்: ராகவா லாரன்ஸ் ட்விட்..!

ஞாயிறு, 16 ஜூலை 2023 (18:32 IST)
என்னை போலவே என் தம்பிக்கும் ஆதரவு கொடுங்கள் என நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஆனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் என்பவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருள்நிதி நடித்த டைரி என்ற திரைப்படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு புல்லட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தன்னை போலவே தனது சகோதரர்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து கூறியிருப்பதாவது:
 
’புல்லட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எல்வின் ஹீரோவாக நடிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் என் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்ததைப் போல, எனது சகோதரருக்கும் அதை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்