தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிரம்பியது… ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு!

vinoth

சனி, 17 பிப்ரவரி 2024 (10:52 IST)
இந்தி சினிமாவில் ஆஹா லைஃப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2 , தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

ராதிகா, தமிழ்சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், சித்திரம் பேசுதடி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில்  நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் சில படங்களில் நடித்திருந்த ராதிகா ஆப்தே, அதன் பிறகு அங்கு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதற்கான காரணம் குறித்து இப்போது ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்த ஒன்று. அவர்கள் பெண்களை நடத்தும் விதம் சகிக்க முடியாதது. அங்குள்ள நடிகர்கள் ஷூட்டிங் நடக்கும்போதே ‘மூட்’ சரியில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். இதனால் ஷூட்டிங் ரத்தாகும். தெலுங்கு படங்களில் நடிக்கும்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் அங்கு நடிப்பதை நிறுத்தி விட்டேன்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்