தமிழகத்துக்கு படையெடுக்கும் தெலுங்கு சினிமா படக்குழுவினர்!

வியாழன், 16 டிசம்பர் 2021 (19:17 IST)
தெலுங்கு படங்கள் இப்போது பேன் இந்தியா படமாக உருவாக ஆரம்பித்துள்ளன.

பாகுபலியின் இமாலய வெற்றி தெலுங்கு சினிமாவின் மார்க்கெட்டை இப்போது பல மடங்கு அதிகமாக்கியுள்ளது. கிட்டத்தட்ட தெலுங்கு சினிமாவின் எல்லா கதாநாயகர்களும் இப்போது தங்கள் படங்களை பேன் இந்தியா படமாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் டிசம்பர், ஜனவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் புஷ்பா, ஆர் ஆர் ஆர் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய மூன்று மிகப்பெரிய படங்கள் ரிலீஸாக உள்ளன.

இதற்கான ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் எல்லா ஊர்களுக்கும் சென்று நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆர் ஆர் ஆர் மற்றும் புஷ்பா படக்குழுவினர் தமிழகத்துக்கு வந்து சென்றதை அடுத்து ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் ராதே ஷ்யாம் படத்தின் ப்ரமோஷனுக்காக பிரபாஸ் மற்றும் அந்த படக்குழுவினர் அடுத்த வாரம் சென்னை வர உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்