விஷாலை கழுவி ஊற்றிய ராதாரவியா இப்படி பேசினார்; அதிர்ச்சியில் கோலிவுட்

ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (15:20 IST)
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிடுவது தவறில்லை என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.


 

 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை அண்ணாநகரில் இருக்கும் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
 
இன்று மாலை வாக்கு பதிவு முடிந்தவுடன், ஓட்டு எண்ணிக்கை நடைப்பெற்று முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நடிகர் ராதாரவி வாக்களித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
 
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சங்கத்திற்கு நன்மை செய்ய வேண்டும். தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறு ஏதும் இல்லை என கூறினார்.
 
முன்பாக ராதாரவி விஷாலை கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் விஷாலை பற்றி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்