ஆனால் ரிலீஸுக்கு பிறகு மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் வசூலிலும் ஜொலிக்கவில்லை. ஆனாலும் நேற்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நடத்தி கொண்டாடினர் படக்குழுவினர். அப்போது பேசிய ஆர் ஜே பாலாஜி தன்னுடைய ஹிட் படங்களான எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஆசையும் உண்டு எனக் கூறியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ரத்தம், கத்தி போன்ற வன்முறைப் படங்களுக்கு மத்தியில் சிறுநம்பிக்கையை தரும் படமாக சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வந்ததில் மகிழ்ச்சி. எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தையும் ஐசரி கணேஷ் சாரோடு இணைந்துதான் செய்வேன்” எனக் கூறியுள்ளார்.