ஜெய் பீம் மாதிரி ஒரு படம் நடிக்கணும்! – தெலுங்கு நடிகர் நானியின் ஆசை!

செவ்வாய், 7 ஜூன் 2022 (13:03 IST)
பிரபல தெலுங்கு நடிகரான நானி தான் ஜெய்பீம் போன்ற படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் நானி. தமிழில் நான் ஈ படம் மூலம் இவர் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ஷ்யாம் சிங்கா ராய் பல மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நஸ்ரியாவுடன் இணைந்து அண்டே சுந்தரானிகி என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூன் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் பேசிய நானி “சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்தபோது என்னுடைய திரை பயணத்திலும் இப்படி ஒரு படம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இது போன்ற கதைகளை தெலுங்கிலும் சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்