வெறிகொண்டு கொலை செய்யும் "சைக்கோ" - பதறவைக்கும் ஸ்னீக் பீக்!

செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:15 IST)
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் சைக்கோ கதாப்பாத்திரம் "புத்தர்-அங்குலிமாலா"வின் கதையை கருவாக கொண்டுள்ளது என படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
 
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சூப்பர் ஹிட் அடித்தது. டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வசூலை எட்டியுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள திக் திக் காட்சி ஒன்று யூடியூபில் வெளியிட்டுள்ளனர். சைக்கோ கொலையாளி ஒரு பெண்ணை வெறிகொண்டு குத்தி கொள்கிறான் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்