“தமிழ்நாடு திராவிட நாடுப்பா… இங்கே மதவாத சக்திகளுக்கு இடமில்லை..” பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்வீட்!

vinoth

செவ்வாய், 4 ஜூன் 2024 (15:14 IST)
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்திய அளவில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்க முடியவில்லை.

குறிப்பாக அந்த கட்சியின் ஸ்டார் வேட்பாளர்களான அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன் போன்றோரால் கூட முன்னிலை வகிக்க முடியவில்லை. இது தமிழகத்தில் மக்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு செய்து வந்த பிரபலம் ஒருவர் தங்கள் நிலைமையைப் பார்த்து மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவுக்கு எதிர்வினையாற்றியுள்ள பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் “பாஜக ஆதரவாளர் ஒருவர் முடிவுகளை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்வது மகிழ்ச்சி.  தமிழ்நாடு திராவிட நாடு. இங்கே பக்தர்களுக்கும், மதவாத சக்திகளுக்கும் இடமில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்