தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு

வியாழன், 2 பிப்ரவரி 2023 (19:13 IST)
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடத்தப்படும் என்றும் அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
 
மார்ச் 23ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 26 ஆம் தேதி 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும் 100 ரூபாய் செலுத்தி உறுப்பினர்கள் இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி காலை 11 மணி முதல் மார்ச் 2-ம் தேதி வியாழக்கிழமை நான்கு மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கலாம் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்