இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு பிரியங்காவுடன் வசிப்பதற்காக அமெரிக்கா பெவர்லி பகுதியில் ரூ.48 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆடம்பர பங்களாவை நிக் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த பங்களா பள்ளத்தாக்கின் சரிவில் கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் முதல் தரத்தில், கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாம். மலைகள் சூழ இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அந்த வீட்டை தேடிப்பிடித்து நிக் வாங்கியுள்ளாராம். இந்த வீட்டை தனக்கு காதலர் கொடுத்த மிகப்பெரிய பரிசாக கருதுகிறாராம் பிரியங்கா சோப்ரா.