இதையடுத்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது மிகவும் அழகாக டீசண்டான லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.