மனைவி பிறந்தநாளுக்கு அப்படி ஒரு தரமான பரிசு கொடுத்த ஹரிஷ் கல்யாண் - என்ன தெரியுமா?

வெள்ளி, 30 ஜூன் 2023 (15:20 IST)
சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அந்த திரைப்படம் அவருக்கு எந்தவொரு நன்மையையும் செய்யவில்லை. ஆனால் அவரை ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலபடுத்தியது பிக்பாஸ் ஷோதான்.
 
அதில் கலந்துகொண்ட பின்னர் அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் கவனிக்கத்தக்க இளம் நடிகரானார். இப்போது அவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன. இதையடுத்து நறமத என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவரது பெண் ரசிகைகளால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 
 
இந்நிலையில் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு : இருவரும் குழந்தைகளாக ஒன்றாக இருப்பது போன்ற ஒரு ஓவிய புகைப்படத்தை பரிசாக கொடுத்து, நான் எப்போதும் ஆன்மா குறித்து நம்புகிறேன். உன்னைச் சந்தித்ததே என் வாழ்வில் அதற்குச் சான்று. நீங்கள் கொடுக்கும் அன்பினால் நீங்கள் மிகவும் தன்னலமற்றவராகவும் நிபந்தனையற்றவராகவும் இருந்தீர்கள். முடிவில்லாமல் என்னை நேசிப்பவனிடம், என் வெறித்தனத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு என் வெறித்தனத்தையும் சேர்த்துக் கொள்பவனிடம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நாஸ்க்!
 
படம் 1: உங்களுக்குப் பிடித்த செல்ஃபி, நாங்கள் இதுவரை மேற்கொண்ட மிகத் திடீர் பயணத்தை நினைவூட்டுகிறது. படம் 2: உங்கள் வாழ்க்கையில் நான் ஏன் உங்களைச் சந்திக்கவில்லை என்று எப்போதும் என்னிடம் கேட்கிறீர்கள். என்னால் அதை மாற்ற முடியாது என்றாலும், குழந்தைகளாக நாம் எப்படி ஒன்றாக இருந்திருப்போம் என்பதற்கான சிறிய கற்பனை இங்கே. என் பரிசை நீங்கள் விரும்பினீர்கள் என்று நம்புகிறேன்! என அவ்வளவு அழகாக காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்