அந்த ஸ்மைல் இருக்கே.... கியூட் லுக்கில் பிரியா பவானி ஷங்கர்!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (14:54 IST)
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியன் 2 , ஓமணப்பெண்ணே , ராகவா லாரன்சுடன் ருத்ரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கியூட்டான ஸ்மைலுடன் போஸ் கொடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்