பெயர் கெட்டுப்போச்சு... கை நழுவிப்போகும் யாஷிகாவின் படங்கள்!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (13:40 IST)
நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது.
 
இந்த விபத்தினால் அவர் மீது இருந்த தவறான பிம்பம் இன்னும் அதிகமாகிவிட்டது. அதன் எதிரொலியாக அவர் தற்போது ஒப்பந்தமாகி நடித்து வந்த படங்கள் அப்படியே பாதியில் நிற்கிறது. மேலும், அவரை வைத்து படமெடுத்தால் இப்போதைக்கு அது சரிவராது என யோசித்த தயாரிப்பாளர்கள் அவரை தங்களது படங்களில் இருந்து நீங்க முடிவு செய்துள்ளனர். இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம் உள்ளிட்ட படங்கள் யாஷிகா கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்