வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்ததில் கல்யாணி ப்ரியதர்ஷன் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளார். அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் “ஹீரோ” திரைப்படம் மூலம் இந்த வாரம் அரங்கேறுகிறது. டிரெய்லரில் மிகச் சிறு காட்சிகளிலே அவர் காட்டப்பட்டிருந்தாலும் அவரது அழகும், துள்ளல் உடல் மொழியும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. “ஹீரோ” படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து கூறும்போது...
நான் ‘மீரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘மீரா’ மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண். எதையும் பேசவும், செய்யவும் முன் பலமுறை யோசித்து செய்யும் பெண். நிஜ வாழ்வில் அதற்கு நேரெதிரானவள் நான். துடுக்குத்தனத்துடன் நினைத்ததை அப்படியே உளறி விடுவேன் எனக் கூறிச் சிரித்தார்.