கமல்ஹாசனோடு இணையும் வாய்ப்பை மறுத்த பிரேமலு இயக்குனர்!

vinoth

திங்கள், 13 மே 2024 (15:24 IST)
மிகச்சிறிய பட்ஜெட்டில் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து உருவான பிரேமலு திரைப்படம் தற்போது வரை 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை அள்ளியுள்ளது.பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களான நஸ்லின் மற்றும் மமிதா பைஜு ஆகியோரை வைத்து ஒரு அழகான பீல்குட் கதையாக இந்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் கிரிஷ்.

இந்த படத்தில் நடித்திருந்த நஸ்லின் மற்றும் மமிதா பைஜு ஆகிய இருவரும் இப்போது சென்சேஷனல் நடிகர்களாகியுள்ளனர். கேரளா தாண்டியும் உள்ள மலையாள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தின் மலையாள வெர்ஷனே மிகப்பெரிய அளவில் வசூலித்தது. மறுபடி தமிழ் டப்பிங் ரிலீஸாகி அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளனர்.

பிரேமலு படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கித் தர கேட்டதாகவும், ஆனால் அந்த வாய்ப்பை கிரிஷ் மறுத்துவிட்டு பிரேமலு படத்தின் இரண்டாம் பாகமான “I AM காதலன்” படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்