அந்த விஷயத்தில் தனுஷை நானும் தப்பாக நினைத்தேன்: பிரசன்னா!!

வியாழன், 27 ஏப்ரல் 2017 (17:29 IST)
நடிகர் பிரசன்னா தற்போது குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 


 
 
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த பவர் பாண்டி படம் அவருக்கு நல்ல பெயரையும் வரவேற்பையும் பெற்றுத்தந்துள்ளது.
 
இந்நிலையில் ஒரு பேட்டியில் ப.பாண்டி படத்தின் இயக்குனர் தனுஷை பற்றி பேசியிருந்தார் பிரசன்னா. அவர், கூறியதாவது, ஆரம்பத்தில் எல்லாரும் கூறியது போல நானும் தனுஷ் லக்கால் தான் வெற்றி பெருகிறார் என்ற தப்பான கண்ணோட்டத்தில் இருந்தேன்.
 
ஆனால் நேரில் அவரது திறமை பார்த்து நான் நினைத்தது மிகப்பெரிய தவறு என்று உணர்ந்தேன். தனுஷ் நடிகர், பாடகர், இயக்குனர் என எல்லா விதத்திலும் கடுமையாக உழைக்கிறார் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்