துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இதில் நடிகர் ரஹ்மான் கதாநயகனாக நடித்துள்ளார். 21 வயது இளம் இயக்குநர் கார்த்திக் நரேனின் முதல் படம் துருவங்கள் பதினாறு. 1980 மற்றும் 1990களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழந்தவர் ரகுமான். இடையே நடிக்காமல் இருந்தவர், இயக்குநர் அமீரின் ராம் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
ரகுமான் 1986ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் நிலவே மலரே நடித்ததை பாரட்டிய விஜய்யின் அம்மா ஷோபா 30 வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ள துருவங்கள் பதினாறு படத்தை பார்த்து பாராட்டியதை, ரகுமான் தனக்கு இன்ப அதிச்சியை தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.