பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ரூ.150 கோடி பட்ஜெட்டில், ரூ.35 கோடி ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டுமே செலவிடப்படும். தெலுங்கு சினிமாவில் ஒரு சண்டைக்காட்சிக்கு செலவழிக்கப்பட்டும் அதிகபட்ச தொகை இது. நிறைய கார்களும், ஆக்ஷனும் நிறைந்த, 20 நிமிட சேஸிங் காட்சி இது. இப்படத்துக்கு ஷங்கர் - எஹ்ஸான் - லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்கிறார்.