கள்ளநோட்டு அச்சடித்த பிரபல மலையாள நடிகை கைது

புதன், 4 ஜூலை 2018 (11:11 IST)
கேரளாவில் கள்ளநோட்டு அச்சடித்த பிரபல சீரியல் நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அதிக அளவில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனைத் தடுக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் போலீஸார் நடத்திய வாகன சோதனையில், கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 
 
இதற்கு மூலையாய் செயல்பட்டது மலையாள டி.வி. நடிகை சூரியா என்பது தெரிய வந்தது. அவரது வீட்டை ரகசியமாய் நோட்டமிட்ட போலீஸார் அவர் வீட்டிற்கு சந்தேகிக்கும்படியான நபர்கள் வந்து செல்வதை கண்டுபிடித்தனர். இதனால் அவரது வீட்டினுள் அதிரடியாக நுழைந்த போலீஸார் வீட்டிலிருந்த ரூ.57 லட்சம் மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.200 கள்ள நோட்டுகள், கம்ப்யூட்டர், ஸ்கேனர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 
மேலும் நடிகை சூரியா, அவரது தாய் ரமா தேவி (56), தங்கை சுருதி (29) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 1 லட்சம் நல்ல நோட்டிற்கு 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்த நடிகை குடும்பத்தோடு கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்