சினிமா என்பது சவால்கள் நிறைந்த தொழில், நெருக்கடி மிக்க இந்த தொழிலில் சரியாக தூங்க முடியாது நேரத்திற்கு சாப்பிடவும் முடியாது. இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனை ஏற்படும்.
இதனைத் தடுக்க நான் தினமும் காலை ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். அதில் அரைமணி நேரம் சாதாரண உடற்பயிற்சிகள் செய்வேன். கடைசி அரைமணி நேரத்தில் யோகா, தியானம் செய்வேன். இதனால் உடலில் இருக்கும் விஷ பொருட்கள் வெளியேறும். சருமம் அழகாகும். மனஉளைச்சல் குறையும். யோகா தான் மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே மருந்து என தமன்னா கூறியுள்ளார்.