ஆக்‌ஷன் படங்களில் நடிக்கவேண்டும்… கதாபாத்திர தேர்வு குறித்து பூஜா ஹெக்டே விருப்பம்!

vinoth

சனி, 8 பிப்ரவரி 2025 (08:00 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் தெலுங்கு சினிமாதான் அவரை முதலில் அங்கீகரித்தது. அங்கு முன்னணி நடிகர்களோடு பல ஹிட் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் தமிழில் பீஸ்ட் படத்தில் நடிதத்தன் மூலம் அவருக்கு திருப்புமுனை கிடைத்தது.

இப்போது பேன் இந்தியா நடிகையாக அறியப்படும் அவர் தமிழி, தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது தமிழில் சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ படத்திலும் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க ஆசை என்பது குறித்து அவர் பேசியுள்ளார். அதில் “ஆக்‌ஷன் படங்கள், தந்தை மகள் பாசத்தை சொல்லும் கதைகள், ஹாரிபாட்டர் போன்ற மாயாஜாலக் கதைகள் என பல வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்