இன்றிரவு 9 மணிக்கு டிரைலர்: ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு அறிவிப்பு!
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:17 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது
இதற்காக நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யாராய் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் படத்தின் டிரைலர் இரவு 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலரை மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்