தமிழ் சினிமாவில் யாராலும் மறுக்க முடியாத ஒரு முகம் என்றால் எம் ஜி ஆர் ஐ சொல்லலாம். பல போராட்டங்களுக்குப் பிறகு கதாநாயகன் ஆன எம் ஜி ஆர் , அதன் பின்னர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக இருந்தார்.
தீவிர அரசியலிலும் பங்குபெற்ற அவர், தமிழக முதலமைச்சராகவும் 11 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். அவர் இறந்து 40 ஆண்டுகள் மேலாகியுள்ள நிலையில் இப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள உலக சினிமா சாதனையாளர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து எம் ஜி ஆர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.