'காதலர் தினம் முதல் தொடங்கும் ‘பொன்னியின் செல்வன் 2’ புரமோஷன்?

புதன், 8 பிப்ரவரி 2023 (13:25 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. 
 
இந்த படத்தின் போஸ்ட் ப்ராடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
 
முதல் கட்டமாக வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த சிங்கிள் பாடல் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ராஜராஜ சோழன் மற்றும் வானதி ஆகிய இருவருக்குமான ரொமான்ஸ் பாடல் இது என்றும் இந்த பாடலை ஏஆர் ரகுமானே பாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இனி அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் புரமோஷன் அடுத்தடுத்து தொடங்கும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்