பிரபல பாடகி மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

திங்கள், 23 மே 2022 (22:52 IST)
தமிழ் சினிமாவில் பிரபல பாடகி சங்கீதா சஜித் இன்று உடல் நலக்குறைவால்  மரணமடைந்தார்.

 கேரளா மா நிலத்தைச் சேர்ந்தவர் சினிமா பின்னணி பாடகி சங்கீதா சஜித். இவர் மிஸ்டர் ரோமியோ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தண்ணீரைக் காதலிக்கும் மீங்களா இல்லை என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இதுவரை தென்னிந்திய சினிமாவில் சுமார் 200 பாடல்கள் பாடியுள்ளார். கடந்த சில  நாட்களாக சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர், கேரளாவில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில்   இன்று காலை அவர் நேற்று உயிரிழந்தார். இவரது  மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்