என்னை நிராகரிச்சிட்டு நீங்க படம் பண்ணவே முடியாது!.. எம்.ஜி.ஆருக்கு சவால் விட்ட வாலி!.

Raj Kumar

வியாழன், 23 மே 2024 (12:04 IST)
தமிழ் சினிமா, தமிழக அரசியல் இரண்டிலுமே மிகப்பெரும் உச்சத்தை அடைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அவை பெரும் வெற்றியடையும் என்பது அப்போதைய நம்பிக்கை.



இதனால் எம்.ஜி.ஆர் அவர் நடிக்கும் திரைப்படங்களில் நிறைய விதிமுறைகளை வைத்திருந்தார். அதாவது அவர் நடிக்கும் கதைகள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூற வேண்டும். மூட நம்பிக்கையை விதைக்கும் கதைகளில் நடிக்க மாட்டார். அதே போல படத்தில் நடிக்கும் நடிகர்கள் முதல் பாடல்கள் வரை அனைத்தும் எம்.ஜி.ஆரின் மேற்பார்வைக்கு வர வேண்டும்.

இந்த நிலையில் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதி வந்தார். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை எம்.ஜி.ஆரே இயக்கி நடித்து வந்தார். அப்போது அந்த திரைப்படத்தில் மட்டும் வாலிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எம்.ஜி.ஆர்.



பிறகு ஒருமுறை வாலியை சந்திக்கும்போது உலகம் சுற்றுல் வாலிபன் படத்தில் உங்களை சேர்த்துக்கொள்ளவில்லை. அடுத்த படத்தில் சேர்ந்து பணிப்புரியலாம் என கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். அதற்கு பதிலளித்த வாலி உலகம் சுற்றுல் வாலிபன் என்னும் பெயரிலேயே என் பெயர் உள்ளது.

என்னை நீக்கிவிட்டு நீங்கள் படத்தை வெளியிட வேண்டும் என்றால் உலகம் சுற்றும் பன் என்றுதான் படத்திற்கு பெயர் வைக்க வேண்டும். என்னை நிராகரித்துவிட்டு நீங்கள் படம் பண்ணவே முடியாது என கூறியுள்ளார். அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் அவர் வாலியை நிராகரித்ததே கிடையாது என ஒரு பேட்டியில் கூறுகிறார் வாலி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்