செளந்தர்யாவை வியந்து பார்க்கும் ரஜினிகாந்த் பேரன்!

ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (13:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளவுந்தர்யா ரஜினிகாந்த், தனது முதல் கணவர் அஸ்வினை விவகாரத்து செய்துவிட்டு தற்போது விசாகன் என்பவரை மறுமணம் செய்ய உள்ளார். 
 
செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11 ஆம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. ரஜினிகாந்தும் அரசியல் தலைவர்களுக்கு திருமண பத்திரிக்கை வழங்குவது என கல்யாண வேலையில் படு பிஸியாக உள்ளார். 
இந்நிலையில் செளந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணா தனது அம்மாவின் கையில் போடப்படுள்ள மருதாணியை வியப்பாக பார்க்கும் புகைப்படம் ஒன்றௌ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதே போல் ரஜினி தனது மகளை பாசத்தால் கட்டி அனைத்துள்ள புகைப்படமும் வெளியாகி உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்