வெளியானது! " பேட்ட" - நவாஸுதீன் சித்திக்கின் கதாபாத்திரம்

புதன், 5 டிசம்பர் 2018 (17:34 IST)
"பேட்ட" படத்தில் நவாஸுதீன் சித்திக் கேரக்டர் குறித்து சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர். ரஜினியின் 165-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
 
இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வெளியானதை தொடர்ந்து  தற்போது நவாஸுதீன் சித்திக்கின் கதாபாத்திரம் வெளியிடப்பட்டிருக்கிறது. 
 
பேட்ட படத்தில் 'சிங்கார் சிங்' என்ற கேரக்டரில் நவாஸுதீன் சித்திக் நடிப்பது இதன் மூலம் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. 
 
விஜய் சேதுபதியின் போஸ்டரில் எப்படி ரஜினி வாக் இருந்ததோ அதே போல் நவாஸுதீன் சித்திக் போஸ்டரின் பின்புறத்திலும் ரஜினி ஸ்டைலாக நடந்து வரும்  புகைப்படம் இடப்பெற்றுள்ளது. 

.@Nawazuddin_S as #SingaarSingh#PettaCharacterPoster@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers @SasikumarDir pic.twitter.com/nhWpiiXpaN

— Sun Pictures (@sunpictures) December 5, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்