உலகத் திரைப்பட விழாவில் பேரன்பு

வியாழன், 25 ஜனவரி 2018 (19:11 IST)
ராம் இயக்கியுள்ள ‘பேரன்பு’ படம், உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. இந்தப் படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார்.
 
நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் 47வது ரேட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘பேரன்பு’ படம் தேர்வாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பிரத்யேக காட்சி, 27ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் சில திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட பின்னர் கோடை விடுமுறையில் படம் ரிலீஸாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்