மம்மூட்டியுடன் நடிக்கும் பிருத்வி பாண்டியராஜன்

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:23 IST)
பிருத்வி பாண்டியராஜன், மம்மூட்டியுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.



 

 
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிவரும் படம் ‘ஸ்ட்ரீட் லைட்ஸ்’. மம்மூட்டி நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய கேரக்டரில் பிருத்வி பாண்டியராஜன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘உத்தம வில்லன்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்டத், இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனில் மட்டுமே பிருத்வி நடிக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் அப்பா பாண்டியராஜனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். “மம்மூட்டி சார் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார். எனக்கு ஜோடியாக மலையாள நடிகை லிஜோமோல் நடித்துள்ளார். இருவருக்குமான காதல் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது” என்கிறார் பிருத்வி பாண்டியராஜன். மம்மூட்டியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்