ரஜினி படத்தில் மம்மூட்டி?

வெள்ளி, 2 ஜூன் 2017 (18:13 IST)
ரஜினியின் ‘காலா’ படத்தில், மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


 

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், சாக்ஷி அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை, தனுஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில், ரஜினியின் ஜீப்பில் அம்பேத்கர் பற்றிய குறியீடு இருப்பதாக ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இந்நிலையில், மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டி, அம்பேத்கராக நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஏற்கெனவே அம்பேத்கராக நடித்திருக்கிறார் மம்மூட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்