''பதான் '' படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் ! முக்கிய அறிவிப்பு

வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (17:07 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் , இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய படம் பதான். இப்படத்தில் ஷாரருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

ஆதித்யா சோப்ராவின், யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கில்  அவர் இணைந்துள்ளார். இந்தத் தகவலை ஷாருக்கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமீபத்தில் பாதன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வைரலானது.

இந்த நிலையில், யஷ்ராஜ் பிலிம்ஸின்  50 வது   ஆண்டை( தொடக்கம் 1970)  விழாவை சிறப்பிக்கும் வகையில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, ரிலீசாகவுள்ளதாகவும் குறிப்பிட்டு, இப்படத்தில் ஜான் ஆப்ரகாமின் போன்ஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. இது வைரலாகி வருகிறது.

Locked & loaded. Meet @TheJohnAbraham in #Pathaan. Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you on 25th January, 2023. Releasing in Hindi, Tamil and Telugu. @deepikapadukone| #SiddharthAnand | @yrf | #5MonthsToPathaan pic.twitter.com/efLWW3MaES

— Shah Rukh Khan (@iamsrk) August 25, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்