மல்டிபிளக்ஸ் போல் தலைவர்கள் சமாதிகள் தேவையில்லை - பார்த்திபன்

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (17:22 IST)
மெரினா கடற்கரையில் தலைவர்கள் சமாதிகள் தொடர்ந்து அமைவது பற்றி நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
பேரறிஞர் அண்ணா மரணமடைந்த போது, அவரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தற்போது கருணாநிதி அனைவரின் உடலும் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிலும், கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அதிமுக, திமுக இடையே சட்டப் போராட்டம் நடைபெற்றது.
 
இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன் “கடற்கரையில் தலைவர்களின் சிலைகளை வைப்பதில் எனக்கு மாற்று கருத்து உண்டு. 50 வருடங்கள் கழித்து இளைஞர்கள் அனைவரும் அப்துல்கலாம் சமாதியை தேடித்தான் செல்வார்கள்.  அதுதான் சரி. அதை விட்டு விட்டு, இந்த இடத்தில் இன்னொரு சமாதி இருக்கு.. அதனால் இவர்களையும் பார்த்துட்டு போகலாம் என இருக்கக் கூடாது. எல்லா தலைவர்களின் சமாதியும் மல்ட்டிபிளெக்ஸ் காம்ப்ளக்ஸ் போல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. தலைவர்களின் சமாதியை தேடித்தான் செல்ல வேண்டும்” என அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்