அதுவும் இதுவும் ஒன்றா? புள்ளிக்கணக்கு குறித்து கேள்வி எழுப்பிய மூத்த கிரிக்கெட் வீரர்!

ஞாயிறு, 16 மே 2021 (18:27 IST)
அதுவும் இதுவும் ஒன்றா? புள்ளிக்கணக்கு குறித்து கேள்வி எழுப்பிய மூத்த கிரிக்கெட் வீரர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக்கணக்கு குறித்து இங்கிலாந்து அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராட் இந்தியா, வங்கதேசம் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதும், இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதும் ஒன்றா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் மூத்த பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்
 
இந்தியா வங்கதேசத்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதேபோல் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இந்த இரண்டையும் ஒரே அளவில் மதிப்பிட முடியுமா? அந்த கணக்கு எனக்கு புரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ஆரோக்கியமான போட்டியை உருவாக்க புள்ளிவிவரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்