வன்முறையின் மூலமே தான் நினைத்தது கிடைக்கும் என்று எண்ணும் ஒரு அனாதை இளைஞன், ஒரு கட்டத்தில் தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான். இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவன் தன் காதலிக்காக நிழல் உலக தாதாக்கள் நடத்தும் ஒரு சண்டையில் கலந்து கொள்ள நேரிடுகிறது. அதில் இருந்து எப்படி அவன் வெளியே வருகிறான் என்பது தான் பண்டிகை படத்தின் கதை.