நிறைய பட்டாசு வெடிங்க... காற்று மாசு ஏற்படாது: அண்ணாமலை அறிவுரை

சனி, 22 அக்டோபர் 2022 (18:22 IST)
தீபாவளியன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிறைய பட்டாசு வெடியுங்கள், காற்று மாசு எதுவும் ஏற்படாது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தீபாவளி என்பது நமது கலாச்சார பண்டிகை என்றும் அன்றைய தினம் பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம் என்றும் இந்தப் பேட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
சிவகாசியில் நமது நண்பர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்றும் நாம் அதிகமாக பட்டாசுகள் வாங்கி வெடித்தால்தான் அவர்களது கஷ்டம் தீரும் என்றும் எனவே நிறைய பட்டாசு வெடியுங்கள் என்றும் ஒரே ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு பெரிதாக எதுவும் பாதிப்பு ஏற்படாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்