''சர்தார் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியதற்கு நன்றி''- கார்த்தி

சனி, 22 அக்டோபர் 2022 (17:25 IST)
‘’சர்தார்’’ படத்தின் வெற்றிக்கு கார்த்தி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தை   பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம்  தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சர்தார் படம் மக்களின் வரவேற்பை பெற்றது குறித்து, கார்த்தி தன் தன் டுவிட்டர் பக்கத்தில், மக்களே, சர்தார் படத்தை வெற்றி அடைய செய்ததற்காக   உங்களுக்கு மிக நன்றிகள்….உங்கள் பாராட்டுகளில் படக்குழு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்