இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

Mahendran

வெள்ளி, 24 மே 2024 (18:26 IST)
தென் மாவட்டங்களில் சாதி மோதலை தூண்டுகிறார் என இயக்குனர் பா ரஞ்சித் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் தீபக் ராஜா கொலை வழக்கில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பா ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பரமக்குடி டிஎஸ்பி இடம் தென் தமிழக கட்சி மாநில உரங்களுக்கான புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் பா.ரஞ்சித்தின் பதிவு  தென் மாவட்டங்களில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் இருக்கிறது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 ஏற்கனவே பா ரஞ்சித் சகோதரர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது பா. ரஞ்சித் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்