நாங்க என்ன தாழ்த்தபட்டவர்களா? 3 நாட்களுக்கு பின் திடீரென பொங்கிய பா.ரஞ்சித்

சனி, 16 மே 2020 (08:10 IST)
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சமூக கருத்துகளை ஆவேசமாக தெரிவித்து வருவார் என்பதும் குறிப்பாக தலித் சமுதாயதற்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் எழும் குரல் அவருடைய குரலாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திமுக எம்பி தயாநிதி மாறன் அவர்கள் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்று பேட்டி ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலித் குறித்து சர்ச்சை பேச்சு பேசுபவர்களை குறித்து உடனடியாக விமர்சனம் செய்யும் பா ரஞ்சித், இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
தயாநிதி எம்பி அவர்கள் திமுகவின் முக்கிய புள்ளி என்பதால் பா ரஞ்சித் உள்பட ஒருசில பிரமுகர்கள் அமைதியாக இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பின்னர் ஒரு வழியாக தனது எதிர்ப்பை பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் காண்பித்துள்ளார். இருப்பினும் தயாநிதி மாறன் உள்பட யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக இந்த ட்விட்டை அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில் பா ரஞ்சித் கூறியிருப்பதாவது
 
நாங்க என்ன தாழ்த்தபட்டவர்களா?சமூகவெறுப்பு, அவமதிப்பு,உரிமை மறுப்பு, தலித்மக்களுக்கு இவைகளை செய்யலாம் என ஒப்புக்கொள்கிறீர்களா? சமூகநீதி அறியாமையால் தலித்வெறுப்பு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இயல்பாக மண்டிக்கிடக்கிறது என எப்போது உணர்வீர்கள் கழகங்களே?  #பெரியாரை_மறந்த_கழகங்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்