விக்ரம் நடிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்… பா ரஞ்சித்தின் அடுத்த பட அப்டேட்!

சனி, 4 செப்டம்பர் 2021 (10:11 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இப்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் இப்போது புதுமுகங்கள் நடிக்கும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்துக்கு முதல் முறையாக இளையராஜா இசையமைக்க உள்ளார். இதையடுத்து அவர் விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ கதையாக உருவாக உள்ளதாம். ஏற்கனவே இந்த கதையை ரஞ்சித் நடிகர் விஜய்க்கு சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்