விக்ரம் படப்பிடிப்பில் மைனா... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

வியாழன், 2 செப்டம்பர் 2021 (15:26 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகைகள் நடிப்பதாக செய்திகள் வெளியானது. 
 
அதன்படி ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மைனா நந்தினியும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் லோகேஷ் கனகராஜுடன் மைனா நந்தினி விக்ரம் படப்பிடிப்பில்  எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்