2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த வடிவேலு மட்டுமே இந்த பாகத்தில் தொடர்கிறார். ஆரம்பத்தில் படக்குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்த வடிவேலு, நாட்கள் செல்ல செல்ல முரண்டு பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படக்குழு மொத்தமும் அவர் மேல் மனக்கசப்பில் இருந்த நிலையில், ஒரு நாள் இயக்குனர் பி வாசு கோபமாகி, வடிவேலுவை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே வெளியேற சொல்லிவிட்டார் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.