இந்தியா திரும்பிய பி வி சிந்து… அனைவருக்கு நன்றி தெரிவிப்பு!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:52 IST)
ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை பி வி சிந்து இந்தியா திரும்பியுள்ளார்.

ஒலிம்பிக் பேட்மிட்டன் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். இதனை அடுத்து அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் . இதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியர் என்ற பெருமையை பி வி சிந்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் பதக்கத்தோடு இந்தியா திரும்பிய அவர் அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘நான் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்