ஓவர் ஆக்டிங் ஜூலியை ஓங்கி மூஞ்சிலேயே குத்துவேன்: அதிரடியில் இறங்கிய ஓவியா!

சனி, 29 ஜூலை 2017 (13:56 IST)
நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலி இடையே இருந்த மோதல் வெடித்தது. இதில் ஜூலி ஓவராக பண்ண அதற்கு ஓவியா அதிரடியாக எதிர்வினையாற்றினார்.


 
 
ஜூலி இதுவரை எந்த டாஸ்கிலும் தலைவராக இருக்காததால் அவரை நேற்றை சமையல் போட்டி டாஸ்கிற்கு தலைவராக நியமித்தார் பிக் பாஸ். இதனையடுத்து தலைவர் என்ற பதவியுடன் ஜூலி செய்த விஷயங்கள் பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களுக்கும் ரசிக்கும் படியாக இல்லை.
 
சமையல் போட்டியில் தோற்ற அணியை ஜூலிக்கு பணி புரிய பணித்தார் பிக் பாஸ். அதில் ஜூலி தரையில் நடக்க கூடாது. அவருக்கு ஒருவர் சிகப்பு கம்பளம் விரிக்க வேண்டும் உள்ளிட்ட பல வசதிகளை ஜூலிக்கு தோல்வியடைந்த அணி செய்ய வேண்டும்.
 
அதில் ஜூலி தனக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் பணியை ஓவியாவுக்கு வழங்கினார். இந்த பணியை ஓவியாவை பழி வாங்க தான் ஜூலி செய்தாரா என சந்தேகிக்கப்பட்டது. அதற்கு முன்னரே ஜூலி இந்த அணியில் ஓவியா இருப்பதால் தான் அவர்களை தோல்வியடைந்த அணியா அறிவித்தாரோ என்ற சந்தேகம் எழுந்தது.
 
ஜூலி தனது நடவடிக்கைகளில் நேற்று சற்று மாறுபட்டு காணப்பட்டார். தலைவர் என்ற பதவி கிடைத்ததும் ஜூலியின் ஓவர் ஆக்டிங் தாங்க முடியவில்லை. இதனையடுத்து ஜூலி தனக்கு சிகப்பு கம்பளம் விரிக்க ஓவியாவை அழைத்தார். அப்போது ஓவியா சிகப்பு கம்பளம் சிறிதாக இருந்ததால் ஓவியா ஜூலியை சிக்கப்பு கம்பளத்தின் மேல் நிற்க வைத்து கம்பளத்தை இழுத்ததால் ஜூலி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
 
இதனால் வீட்டில் உள்ளவர்கள் பதற்றமடைந்தனர். ஆனாலும் ஜூலி விராப்பாக நீ இழு என ஓவியாவை உசுப்பேற்ற ஓவியா மேலும் அதிரடியாக ஜூலியை பற்றி கவலைப்படாமல் இழுக்க ஆரம்பித்தார். ஆனால் மீண்டும் ஜூலி தடுமாறி விழுந்தார். ஆனால் ஓவியா சொன்ன பதில் ஒன்று தான் எனது டாஸ்கை நான் செய்கிறேன் அவ்வளவு தான். இதன் மூலம் ஓவியா கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டாரோ என்ற தோற்றம் உருவாகியது.
 
இதனையடுத்து ஓவியா ரெஸ்ட் ரூம் சென்று விட்டார். அங்கு ஆராவும், சினேகனும் ஓவியாவை சமாதானம் செய்தனர். அப்போது ஓவிய சிறிது அழுதார். தன்னுடைய சுய மரியாதை இதன் முலம் கெட்டுவிட்டதாக கூறினார். ஒரு வழியாக ஓவியாவை அவர்கள் சமாதானம் செய்ய, ஓவியா அவர்களிடம் நான் வருகிறேன், அவ ஓவர் ஆக்ட் பண்ணுணா நான் ஓங்கி மூஞ்சிலேயே குத்துவேன் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்