என்னாது யாஷிகாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...? ஷாக்கிங் புகைப்படம் செம வைரல்!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (09:35 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார். அத்துடன் அவ்வபோது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது வரலக்ஷ்மி விரத தினத்தை முன்னிட்டு அழகாக புடவைக்கட்டி ட்ரடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். அதில் கவனிக்க கூடிய விஷயம் என்னவெனில்,  நெற்றியின் நடுவில் குங்குமம் வைத்து திருமணம் ஆன போல் அதிர்ச்சியளித்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் பதறிப்போய் ஒரு நிமிடம் நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டனர். உடனே யாஷிகா, "அது எல்லாம் ஒன்னும் இல்லை வரலட்சுமி நோன்பை முன்னிட்டு இப்படி ஒரு போஸ் கொடுத்தேன்” என்று கூறி கூல் செய்தார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy #varlakshmivratham ❤️⭐️ Mua @artistrybyolivia Hair @jayashree_hairstylist On camera @sarancapture

A post shared by Y A S H ⭐️ யாஷிகா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்