ஐஸ்வர்யா மேனன் இப்போ வடசென்னை பொண்ணு

புதன், 28 செப்டம்பர் 2016 (12:52 IST)
ஐஸ்வர்யா மேனன் மலையாளி என்றாலும் தமிழ்நாட்டில் வளர்ந்தவர். கிருஷ்ணா நடிக்கும் வீரா படத்தில் இவர்தான் நாயகி.
 

 
 
அறிமுக இயக்குனர் ராஜாராம் இயக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா மேனன் வடசென்னை பெண்ணாக நடிக்கிறார். படத்தில் அவரது பெயர் ரேணுகா.
 
கன்னட படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா மேனனின் முதல் தமிழ்ப் படம் வீரா. முதல் படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரிப்பது பெருமை என்கிறார், ஐஸ்வர்யா மேனன்.

வெப்துனியாவைப் படிக்கவும்