பாடல்கள் இல்லாத அரவிந்த் சாமி படம்

புதன், 16 ஆகஸ்ட் 2017 (13:52 IST)
அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஒரு பாடல் கூட இல்லையாம்.


 

 
‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அடுத்ததாக ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். அரவிந்த் சாமி மற்றும் சுந்தீப் கிஷண் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ஸ்ரேயா சரண், இந்திரஜித் இருவரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

35 முதல் 40 நாட்களுக்குள் ஷூட்டிங்கை முடிக்கத் திட்டமிட்டுள்ளார் கார்த்திக் நரேன். ‘துருவங்கள் 16’ படம் எடுக்கப்பட்ட ஊட்டியிலேயே இந்தப் படமும் எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனனும் தயாரிக்கிறார். யோகன் இசையமைக்கும் இந்தப் படத்தில், ஒரு பாடல் கூட கிடையாதாம். ‘துருவங்கள் 16’ படத்திலேயே இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்