வெளியானது க்ரே மேன் படத்தின் கிளிம்ப்ஸ்… ஆனால் தனுஷதான் காணோம்!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (09:54 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படம் குறித்து இந்தியாவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

தனுஷின் அறிமுக ஹாலிவுட் படமான கிரே மேனை நெட்பிளிக்ஸ் மிக அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது. அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக மார்ச் மாதத்தில் இரண்டு மாதங்கள் அமெரிக்கா சென்று அங்கு காட்சிகளில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் இணையத்தில் வெளியானது. ஆனால் அதில் ஒரு காட்சியில் கூட தனுஷ் இடம்பெறவில்லை. படத்தின் மற்ற இரு கதாநாயகர்களாக ரியான் ரோஸ்லிங், மற்றிம் கிறிஸ் இவான் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளே இடம்பெற்றன. இது குறித்து தனுஷ் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்