திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப வாய்ப்பு இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

வியாழன், 10 செப்டம்பர் 2020 (20:32 IST)
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் சமீபத்தில் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வரும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒருவேளை திரையரங்குகள் திறந்தாலும் தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கும் ஏற்பட்டுவரும் மோதலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை
 
இந்த நிலையில் திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தற்போது அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்